பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஐயையோ! இது எவ்வளவு கஷடமான காரியம்! நம்மால் எங்கே முடியும் என்று நம்மில் யாராவது நினைத்தால், அப்பொழுதே நமது தாழ்வுக்கு நாம் விதைவிதைத்து விடுகிறோம். ஏனென்றால், நாம் ஒரு பெரிய சாதனை ஒன்றுக்கு முயற்சித்துப் பார்க்கிறோம். முடிந்தால் நல்லது. முடியாவிட்டால், என்ன தலைமுழுகிப் போய்விடும்? ஒன்றுமில்லையே! கிராமத்துக்காரர்கள் ஒரு பழமொழியை கெட்டிக்காரத்தனமாகப் பேசுவார்கள். மயிரால்கட்டி, மலையை இழுக்கிறோம். வந்தால் மலை. போனால் மயிர் என்பார்கள். இமாலய முயற்சி ஒன்றில் நாம் இறங்கிவிடுகிற போது, தோற்றுப்போனால் இழப்பது ஒன்றும் இல்லை. இகழ்ச்சியும் இல்லை. ஒருசேர மனதை ஒருநிலைப்படுத்தி, உடலை தயார்படுத்தி, ஒழுக்கமாக இருந்து, பழக்கவழக்கங்களில் பண்பாடு காத்து, முயற்சிக்கும் காலக் கட்டத்தில் வாழ்ந்தோம் பாருங்கள். அதுதான் நாம் பெற்ற வெற்றி. யானைமேல் ஏறி சவாரி செய்ய ஆசை இருப்பது தவறல்ல. அதற்காக முயற்சிப்பதும் தவறல்ல.