பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூலர் அப்படிச் சொன்னவர் இப்படியும் பாடுகிறார். - "முன்னாள் வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்" (585) நமக்கு முன்னே பிறந்த மக்கள் எல்லாம் வந்து வாழ்ந்தனர். அவர்கள் கதை முடிந்து இறந்து போயினர். அவர்களுக்குப் பின்னால் பிறந்தவர்களுக்கு மட்டும் பிரகலாதன் போலவா வாழ்வு கிடைத்தது? இல்லையே!? அவர்களும் போய் ஒழிந்தனர். அவர்கள் வாழ்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்றும் கேட்கிறார். இது அழியும் தேகம் என்கிறார். ஆறுகளுக்கு கரைகள் உண்டு. அந்தக் கரைகள் இரண்டும் ஆற்று வெள்ளம் வெளியேறிபோய்விடாமல் கட்டுக்குள் அடக்கிக் காக்கின்றன. என்றாலும் வெள்ளத்தின் வேகம் கரைகளை அரிக்கின்றன. உடைக்கின்றன. அவற்றைப் போலவே, பாய்ந்து வரும் படு பயங்கர வெள்ளத்தின் வேகம் போல, உடலுக்குள்ளே பொங்கியெழுந்து, துள்ளிக் குதித்துக் கடக்கின்றன. ஆசைகள் பாய்கின்றன. அவற்றை ஏந்திக் கொண்டு, காத்திருக்கிற தேகத்தையே, அந்த பஞ்சேந்திரியங்கள் பாடாய்ப் படுத்தி விடுகின்றன கெடுத்துவிடுகின்றன. அழித்து விடுகின்றன. அதனால்தான் அரித்த உடலை ஐம்பூதங்கள் என்று திருமூலர் தெளிவாகச் சுட்டிக் காட்டிப் போதிக்கின்றார். அவைகளை அடக்காவிட்டால் அவைகளே வாழ்நாள்ை அடைக்கும் தடைகளாக ஆகிவிடுகின்றன. அதனால்தான் மின் அழகான சொற்களில் வயத்தில் அடக்கினால் என்று நயமாக"

  • -