பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 83 1. ஓமியாடைஸ்: ஓர் அமெரிக்க நீக்கிரோ குடும்பத்தில் பதினேழு குழந்தைகளில் இவர் 16வது குழந்தை - தாய், தந்தையர்களோ விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று வயதாக இருந்தபொழுது அந்தப் பெண் குழந்தைக்கு விஷ சுரம். பக்கத்திலே ஏதும் மருத்துவ மனை கிடையாது. மிகவும் கைவிட்ட நிலையில் அந்த ஏழைத் தாய் கழுகு தன் குஞ்சினை இறகுக்குள்ளே வைத்துத் தூக்கிச் சுமப்பதுபோல், அந்தக் குழந்தையை அவள் தூக்கிக் கொண்டு நூறு மைல் ரயிலில் பிரயாணம் செய்து மருந்து வாங்கிக் கொடுத்தாள். இப்படியாக இருந்தும் அந்தக் குழந்தை படுத்த படுக்கையாகக் கிடந்தது. பிறகு எழுந்து உட்கார்ந்தது. பிறகு நிமிர்ந்து நின்று நடக்கத் தவிக்கிறது. அந்த ஏழைத்தாயின் அரவணைப்பு குழந்தையின் கால்களுக்கு இருந்து வலிமை யூட்டியது. இப்படியாகப் பன்னிரண்டு பதிமூன்று வயதில் நடக்க ஆரம்பித்தது. தனது 16-ஆவது வயதில் ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டு 100-மீட்டர் ஓட்டத்திலும், 200-மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கங்களும், புதிய சாதனைகளையும் படைத்தது. உட்கார்ந்தால் எழமுடியாத ஒருபெண் ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றி பெற்றார் என்றால், தூங்கும்போது காண்கிற கனவா? இல்லையே! இந்தப் பெண் நிரூபித்துக் காட்டிவிட்டாளே! அவளது வரலாற்றைப் படிக்கும்போது, நிமிர்ந்து நில், தொடர்ந்து செல், நிலைத்து நில் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.