பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- - - - - - - - - r–* - Q^C) -- no - கூடாது இந்தக் கலையும் கணக்கும் தெரிந்த ஒரு குரு மூலமாகவே கற்றுப் பயிலுதல் வேண்டும் என்ற எச்சரிக்கையை உங்களுக்கு மீண்டும் தருகிறேன். இனி இந்த மூச்சுப் பயிற்சியில், ஒரு சுற்று என்றால் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம். முதல் மூச்சை இழுக்கும் உள் சுவாசத்தை இடப்புற மூக்கினால் இழுத்து வலப்புற மூக்கினால் வெளியே விடவும். பிறகு வலப்புற மூக்கினால் சுவாசித்து இடப்புற மூக்கினால் வெளியே விடவும் இதற்குத்தான் சுற்று Round என்பார்கள். ஒருவர் ஒரு தடவைக்கு அல்லது 1 நாளைக்கு 10 சுற்றுக்கள் செய்ய வேண்டும் என்றால் 20 பூரகம் 20 இரேசகம் செய்ய வேண்டும். இதை அவசரமில்லாமல் நிதானமாக, நெஞ்சத்தில் இதன் முக்கியத்துவத்தை நினைத்து நினைத்து நெறியோடு முறையோடு செய்யவும். இந்த சுவாசப் பயிற்சியை செய்வதற்கு வலது கையைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். பிராணாயாம முறை வலது கைப்பெருவிரலால் வலது மூக்கை அடைத்து, இடது மூக்கினாலேயே வெளியேயுள்ள காற்றை மெதுவாக உள்ளே இழுத்து, பிறகு வலதுகை மோதிரவிலால் இடது மூக்கை அடைத்துக் கொண்டு வலதுகை பெருவிரலை சற்று உயர்த்தி வலது மூக்கைத் திறந்து உள்ளிழுத்த காற்றை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. இங்ங்ணம் இடது மூக்கிலிருந்து வலது மூக்குக்குப் போய் திரும்பவும் இடது மூக்கில் வந்து விடுவது தான் ஒரு சுற்று என்றோம். அதாவது ஒரு மூச்சு ஒட்டம் என்று