பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


அவர்கள் நினைத்திருந்தாலும், திறந்த வெளியிலும் ஆடுதற்கு வசதியான ஆட்டமாக அமைந்திருந்தது என்று கூறக் கேட்டும் கண்டும், இதற்கு இன்னுெரு பெயரையும் இட்டு அழைத்தனர். அந்தப் பெயர் (Indoor Out Door) என்பதாகும்.

மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் இதனை விரும்பி ஆட, பத்திரிகைகள் பாராட்ட இவ் விதமாக இந்த ஆட்டம் வளரத் தொடங்கியது. இடத்திற்கு இடம், ஊருக்கு ஊர் ஆட்டத்தின் அடிப்படை அமைப்பு ஒன்ருக இருந்தாலும். விதி முறைகள் வேருக இருந்ததோடு, பெயரமைப்பும் புதிது புதிதாகவே தோன்றின.

இந்த ஆட்டத்திற்கு எத்தனை பெயர்கள் பாருங்கள். அவைகளை ஆங்கிலத்திலே தந்திருக் கிறாம்.

Kitten Bali Recreation Ball Recreation Base Ball Navy Ball Diamond Ball Pumpkind Bali Mlush Ball Twilight Ball Play ground Ball Soft Base Ball Lady's Base Ball Indoor Outdoor Soft Ball Army Ball

ஆக, விதிகள் குழப்பம் ஏற்படுத்தியது போலவே, பெயர்க்குழப்பமும் மக்கள் மத்தியிலே பெரிதாகஇருந்தது.