பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கும்பகம் என்பது உள்ளே அடக்குதல். இதற்கு 64 மாத்திர்ை. சிவ சிவ எனும் மறையை 16 மறை கணித்தபடி அடக்க வேண்டும். (16 x 4 = 64) 3. இரேசகம் என்பது காற்றை வெளியே விடுதல். இதற்கு 32 மாத்திரை அதாவது சிவசிவ எனும் மறையை எட்டுமுறை கணிக்க வேண்டும். (8 x 4 = 32) முதலில் இடது மூக்கால் உள்ளிழுத்து, அடக்கி, பிறகு வலது மூக்கால் வெளியே விடுவது என்கிற முறையான கணக்கும் தான் மேலே கூறப்பட்டது. சிவசிவ என்ற சொல்லை ஏன் மனதிற்குள்ளே உச்சரிக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். இது இந்து மதத்திற்குரிய சொல்லாயிற்றே என்றும் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். நல்லது நடக்க மனம் தான் வேண்டும். மதம் அல்ல. மதம் என்பது ஒரு வாழ்க்கையை வழிநடத்தும் இதமாயிற்றே! இங்கே ஒரு கருத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். சிவ என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாகும். சிவன் என்பது சீவன் என்ற சொல்லிலிருந்து குறைந்து சிவன் ஆயிற்று. அதாவது ஜீவன் என்பது சீவனாகி, சீவன் என்பது சிவனாயிற்று என்பது மரபு. உடம்புக்கு உயிராக விளங்குவது ஆருயிராகிய சீவனே என்பதைத் தான் திருமூலர் அழகாகக் குறிப்பிடுகின்றார். உடம்புகள் நாற்கும் உயிராய சீவன் பரனோடு ஒடுங்கும் ஒழியாய் பிரமம் (2089) நம் உடம்பிலே உள்ள சீவன் ஆருயிராகும். அந்த சீவனுடன் என்றும் இணைந்து, கலந்து ஒன்றிப் போயிருக்கும் சக்தியே பரம் என்பதாகும். பரம் என்பது பேருயிராகும்.