பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

 செல்வக்குடி பிறந்த பெண்கள், வெட்ட வெளி யில் சென்று கட்டாந்தரையில் பள்ளம் தோண்டி ஆட இயலாத நிலைமையுடையவர்களாகவும், ஆண் களைப் போல கற்களையும் இரும்புக் குண்டுகளையும் போட்டு ஆட இயலாதவர்களாகவும் இருந்தாலும், தாங்களும் இது போன்ற ஒரு ஆட்டத்தை ஆட விரும்பித் தங்கள் பெற்ருே.ரிடம் போய் கேட்க, அவர்களும் வீட்டிற்குள்ளே வசதியுள்ள பகுதியில் குழியமைத்தோ அல்லது மரப் பலகைக்குள் குழி யமைத்தோ'தந்து கற்களுக்குப் பதிலாக, முத்துக் களைத் தந்து ஆட வைத்தாரென்றும், (முத்து என் பதற்குப் பரல் எனும் சொல்லும் உண்டு) அவ்வாறு பரல் வைத்து ஆடியதால் பரல் ஆடும் குழி என்பது, காலப் போக்கில் மாறி வந்த சொல் வழக்கில், பாலாடும்குழி, பரலாங்குழி, பல்லாங்குழி என்று மாறி வந்திருக்கலாம் என்ற குறிப்புக்கள் உண்டு என்றும் தமிழறிஞர்கள் கூறுகிருர்கள்.

எல்லா பருவத்தினராலும் ஆடப்படுகின்ற இந்த ஆட்டத்திற்குள்ள அத்தனைப் பெயர்களும், பழக்கத்தில் பயன்பட்ட அமைப்பிற்கேற்றவாறு பெயர் பெற்ற அழகுதான், முதலில் நம்மைக் கவரும் தன்மையில் அமைந்திருக்கிறது.