பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

 (rrophy) என்னும் கிரேக்கச் சொல்லுக்குக்கு உரிய பொருளாகும்.

போர்க்களங்களில் வெற்றியடைந்த முற்கால கிரக்க வீரர்கள், தங்கள் வெற்றியினையும் வீரத் தினையும் வெளிப்படுத்திக் காட்ட, போர் நிகழ்ந்த இடத்தில் இருக்கும் மரங்களில், ஒரு சிறு மரப் பலகையைப் பதித்துச் சென்றனர்.

(இப்பொழுது, மரங்களுக்கு எண்கள் போடும் முறையினை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்).

மரத்தின் அடிப்பாகத்தில் பொதித்து வைத்த மரப்பலகை(Slab), காலப் போக்கில் மக்கிப் போவதாகவோ அல்லது மழுங்கிப் போவதாகவோ இருந்தது. ஆனால், ஒருமுறை பொதிந்த மரப் பலகையை மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்பது ரேக்க நாட்டின் கடுமையான சட்டமாக இருந்தது.

ஆகவே, பழுதுபட்டுப் போகின்ற மரப் பலகையை பதிப்பதை விட்டு விட்டு, மரத்தோடு மரமாக நிலத்துப் போகின்ற ஒரு நினைவுச் சின்னத்தைப் பதிக்க, போர்க்கவசத்தினைப் (Armour) து வைத்தனர். அதுவும், காலப் போக்கில் துருப்பிடிதும், மரக் கலரில் மக்கியும் போனதால், வீரர்கள் வேறோரு முறையைப் பின்பற்றினார்கள்.

மரப் பலகையும், இரும்புத் தகடும் நிலைக்க வில்லை என்றதால், அவர்களுக்கு விடி வெள்ளியாக