பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

என்றாலும், எங்கேயோ ஒரு மூலையிலிருந்து ஒரு சில எதிர்ப்புக் குரலகள், ஏளனப் பேச்சுக்கள் எப்படியோ எதிர் வருகின்றன. புதிர் போடுகின்றன. "முறுக்கேறிப் போகிறது உடல்; கிறுக்கேறிப் போகிறது மனம், அதனால் உடற்பயிற்சி என்பது தேவையில்லாத ஒன்று, இது தீர்க்கப் படவேண்டிய ஒன்று" என்று, தீர்க்கத்தரிசிகளைப் போல பேசவோர் உண்டு.

“உடற்பயிற்சி செய்பவன் உண்மையிலே முரடனாகி விடுகிறான். அவனது சொல்லும் செயலும் மனித பழக்க வழககததிற்கு மாறுபட்டது போலவே இருக்கிறது” என்று முன்னவர் கருத்துககு மேளம் தட்டுவோரும் உண்டு.

“உடற் பயிற்சி செய்பவர்கள் அதிக நாட்கள் வாழ்வதில்லலை. இதய நோய், மாரடைப்பு, நெஞ்சுவலி போன்ற நோய்களுக்கு ஆளாகி, குளிக்கப் போய் சேற்றைப் பூசிக் கொள்வது போன்று, இன்பம் தேடிச் சென்று துன்பத்தால் மடிகின்றார்” என்று பாட்டிக் கதை பேசுகின்ற பாமரர்களும் உணடு.

“உடற்பயிற்சி செய்பவர்கள் ஆண்மையிழந்து விடுகின்றனர். அதிலும் அலித் தன்மைக்கு ஆளாகிவிடுகின்றனர். அவர்களுக்கு வாரிசுத் தன்மையும் வீரியமும் அற்றுப் போகின்றது. விந்தும் நீற்றுப் போய் விடுகின்றது” என்று ஆராய்ச்சி எனக் கூறி அவதூறு பேசுவாரும் உண்டு,

உடற் பயிற்சித் துறைபற்றி உலகத்தில் ஒரு சிலரால் பேசப்படுகின்ற குறைகள்தான் மேலே எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றன. அத்தனைக் குறைகளயும் மொத்தமாகச் சுமந்துகொண்டு, இத் தரையில் எழிலாக, முழு நிலவாக உடற்பயிற்சி பவனி வருகிறது என்றால், நாம் அதை நன்கு சிந்திக்க வேண்டுமல்லவா! சீரிய கடமையும் தமக்கு இருக்கிறது அல்லவா!


வி.வி.-5

வி. வி.-5