பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ہری ت;---- ت -------- ۰۰--۔ 0اص۔ נעשיב: "י""ל مہاب ، بم، رقہ، سہاں بug של פעיץ لالبلا ı ı v-Lv-... i * للركن "نتكن என்பதன் மூலமே பல ஒசைகள் உருவாகின்றன. இந்த முதிர்ந்த தேர்ச்சி முறையெல்லாம் நமக்குத் தேவையில்லை. இவ்வளவு அரிய விஷயங்கள் எல்லாம் சுவாச முறையில் இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டவே, இங்கு விளக்கமாக எழுதினேன். பலவிதமான பிராணயாமப் பயிற்சிகள், உடலில் பலவிதமான எழுச்சியையும் உணர்ச்சியையும் உண்டு பண்ணுகின்றன என்னும் உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால் போதும், மேலே விளக்கிய முதல் முறையும் 5வது முறையும் உடலின் வெப்பத்தை உயர்த்தி விடக்கூடிய ஆற்றலை அளிக்கின்றன. 3வது முறையும், 4வது முறையும் உடலில் குளிர்ச்சியை உண்டு பண்ணி, ஒர் அறி துயில் நிலையை அளிக்கின்றன என்பார்கள். நாம் இந்த எட்டு வகைப் பிராணாயாம முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். நாம் நமது உடல் நிலையை உன்னதமான வலிமை நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய பொதுவான பிராணாயாமப் பயிற்சிகளை மட்டும் தெளிவுற கற்றுக்கொண்டு சந்தோஷம் பெறுவோம். எச்சரிக்கை இது. நிச்சயம் கேட்க வேண்டும். இதுவரை நாம் பிராணாயாமம் என்றால் என்ன? அதனை எப்படி செய்வது, சீராக மேற்கொள்வது, சிறப்பினைப் பெறுவது போன்ற கருத்துக்களையெல்லாம் புரிந்து கொண்டோம். இனி, நாம் பிராணாயாமம் செய்கிற சுய நிலைக்கு சுகநிலைக்குத் தயாராகிவிடுவோம். தெரிந்து கொண்டது வேறு, புரிந்து கொள்வது வேறு, செயலுக்கு வருகிற போது, எதைச் செய்ய வேண்டும்? எது நமக்குப் பொருந்தும் என்றெல்லாம் பார்த்துக் செய்வது தான் புத்திசாலித்தனம் என்பதனால், நாமும் அப்படியே தொடரலாம்.