பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வளவு மிகுதியாக உள்ள காற்றுத் தொகுதியிலிருந்து உயிர்காற்றை மட்டும் எடுத்துக் கொள்ள முயற்சிப்பதைத்தான் நாம் சுவாசம் என்கிறோம். எல்லா காற்றுமே, பிராணவாயுவாக இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை என்று நீங்கள் நினைப்பதும் எனக்குத் தெரிகிறது. எல்லோரின் ஏக்கமும் அதுதான். காற்று முழுவதும் பிராணவாயுவாக இருந்துவிட்டால், கஷ்டமே இல்லை என்று நீங்கள் நினைப்பதும் எனக்குப் புரிகிறது. காற்று முழுவதும் பிராணவாயுவாக இருந்துவிட்டால், கஷ்டமே இல்லை என்று நீங்கள் நினைத்தால், நிச்சயமாக அது தவறாகும். பிராணவாயுவை மட்டுமே பிரதானமாக ஏற்றுக் கொண்டு சுவாசித்தால் என்ன ஆகும் என்று மிருகங்களுக்கு பிராணவாயுவை சுவாசிக்க வைத்து பார்த்தபோது, சில நாட்களுக்குள்ளேயே, பிராணவாயுவை சுவாசித்த மிருகங்களின் நுரையீரல்கள் பாதிக்கப்பட்டன என்பது புரிந்தது. அத்னால், பொதுவான காற்று மண்டலத்திலிருந்து பெறுகிற காற்றை சுவாசித்து, அதிலிருந்து பிராணவாயுவைப் பக்குவமாக பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிற போதுதான் எதிர்பார்த்த இன்பம் கிடைக்கிறது. எதிர்நோக்குகிற உயிரும் ஏற்றமுடன் உடலில் நிலைத்திருக்கிறது என்பதும் உயரிய உண்மையாகும். ஆகவே, எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக நாம் காற்றை உள்ளே இழுத்துப் பிடித்து. மேலும் இழுத்து நுரையீரலுக்குள் நிறுத்தி வைத்துப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்குத்தான் நமக்கு சேரும் வலிமை பெருகுகிறது. வாழ்நாள் கூடுகிறது என்கிறார்கள் உடலியல் வல்லுநர்கள். அதனால்தான் காற்றைப் பிடிக்கும் கலை என்று நாம் இங்கே கூறி, உங்களை அழைக்கின்றோம். காற்றைப் பிடிக்கவும் ஒரு கணக்கு இருக்கிறது. அதில் சுவையும் இருக்கிறது என்பதை இனி வரும் பகுதிகளில் நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.