பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


வளைகோல் பந்தாட்டம் விளையாடப் பெறுகிறது. இரும்புத்தூண்களில் பொருத்தப் பெற்ற பலகையில், 10 அடி உயரத்தில் பாதிக்கப்பட்ட வளையம், கூடைப் பந்தாட்டத்தின் இலக்குக் குறியாக இருக்கிறது. குதிரைமேல் ஏறிக் கொண்டு ஆடுகின்ற ஆட்டம், நீர்ப்பந்தாட்டம் போன்றவை எல்லாம் இலக்குக் விளையாட்டுக்களுக்குச் சான்றாகும்.

(2) வலைகட்டி ஆடும் விளையாட்டு :- இரு ஆடுகளப் பகுதிகளுக்கு நடுவே உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் வலைக்கு இரு பக்கத்திலும் இரண்டு குழுக்கள் எதிரெதிராக நின்று வலைக்கு மேலேபந்தை மாற்றி மாற்றி கையாலோ அல்லது பந்தாடும் மட்டையாலோ அடித்து ஆடுகின்ற ஆட்டத்திற்கு மேலே காணும் பெயர் உண்டாயிற்று. பந்தை ஆடாது தவற விடுகின்ற குழு ஒரு வெற்றி எண்ணை இழக்கும் அல்லது அதற்காக எதிர்க்குழு ஒரு வெற்றி எண்ணைப் பெறும். கைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், வளையப்பந்தாட்டம் மேசைப் பந்தாட்டம் போன்ற ஆட்டங்கள் வலைகட்டி ஆடும் விளையாட்டுகளுக்குப் பொருந்தும்.

(3) தடுத்தாடும் விளையாட்டு :- ஒரு குழுவில் உள்ள ஒருவர் பந்தை வீசி எறிய, மறு குழுவைச் சேர்ந்தவர் மட்டையாலோ அல்லது நீண்ட தடியின் உதவியாலோ எறியப்படும் பந்தினைத் தடுத்தாட, அடிபட்டுப் போகும் பந்தினை எறிந்த குழுவினர் நிறுத்திப் பிடித்து ஆட, அதனல் பெறுகின்ற "ஓட்டங்கள்" கணக்கிடப் பெற்று வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற விளையாட்டுக்களுக்கு கிரிக்கெட், வளப்பந்து போன்றவை சான்றாக அமைகின்றன.

(4) குறிவைத்தாடும் விளையாட்டுக்கள் :- மனிதன் பிறந்த காலந் தொட்டே தூரத்தில் உள்ள பொருட்களைக் கல்லை விட்டு எறிந்து (மரத்தில் மாங்காய் அடிப்பது போல.) மகிழும் பழக்கம் இருந்து வருகிறது. பல பொருட்களை ஒன்றாக