பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 2. உற்சாகம் கொள்ளுதல் (inspiration) உற்சாகம் கொள்ளுவது என்பதை, உத்வேகம் கொள்வது என்பதாகவும் கூறலாம். அதாவது, தன்னைத்தானே தூண்டிக்கொள்கிற மனோவேகம் என்று சொல்லலாம். தனக்குள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும்: தனக்குள்ள ஆர்வத்தை விரிவுபடுத்திக்கொள்ளவும், தனக்குள்ள திறமையில் தொடர்ச்சி பெற்றுக் கொள்ளவும், தன்னைத்தானே தூண்டிக்கொள்கிற உத்வேகம் இது. இதனை இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். 1. தனக்குள்ளே எழும் தூண்டுதல் 2. பிறர் சொல்லிப் பெறும் தூண்டுதல் தனக்குத்தானே செய்து கொள்கிற தூண்டுதல், நல்ல இலட்சியத்தை அமைத்துக் கொள்ள உதவும். - பிறர் சொல்லிப் பெறுகிற தூண்டுதல், அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்லத்தான் உதவும். எரிகிற விளக்காக இருந்தாலும், தூண்டுகோல் வேண்டும் என்பது பழமொழி. வாழ்க்கையில் மற்றவர்கள் மரியாதை தருகிற அளவுக்கு உயர்ந்து, வணக்கத்திற்கு உரியவராக வாழ்ந்துவிடுவது என்பதுதான், நமது லட்சியமானால், அதற்கு, என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று யோசிப்பதுடன் நின்றுவிடாமல், செய்கையில் செய்துவா என்ற உற்சாகம் தந்து, உத்வேகம்