பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 39 மென்பந்தாட்டத்தில் இது பொதுவாகப் பயன் படுகின்ற எறி முறையாகும். பந்தைப் பிடித்து எறியும் பொழுது, மூடியுள்ள கை முஷ்டியானது (Knuckles) பந்தை அடிப்பவரை நோக்கி இருப்பதுபோல் வைத்தவாறு எறிகின்ற அமைப்புள்ளதாகும். பிறகு, மணிக்கட்டைக் கொஞ்சம் திருப்பிவிட்டால், பந்தை எறிந்த பிறகு முஷ்டிக்குப் பதிலாக, விரல்கள் பந்தடிப்பவரை நோக்கி இருப்பதுபோல் அமைந்து விடும். இவ்வாறு எறிகின்ற தன்மையில் பந்தானது பின்புறமாகச் சுழல் கொள்வதால் (Backward Spin) மட்டையில் பந்து அடிபடும் பொழுது மேற்புறமாகக் (உயர) கிளம்பிவிடக் கூடிய அளவிலே அமையும். ஆகவேதான் மேலே உயர்த்துகின்ற பந்தெறி என்பதால் மேல் உயர் பந்தெறி என்று பெயரிட்டிருக்கிறோம். 2. வேகப்பந்தெறி (Fast Ball) இடப்புறம் உள்ள படம் பாருங்கள். கையில் உள்ள சுண்டு விரல் தவிர, மற்ற 4 விரல்களின் அழுத்தமான பிடியிலே பந்து அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. பந்தை எறிகின்ற நேரத்தில், நடுவிரலும் ஆட்காட்டி விரலும் ஒருங்கிணைந்து கொண்டிருக்க, பந்து வேகமாக வீசப்படுகின்றது. இதுபோல எறிகின்ற பந்து நல்ல வேகம் கொண்டதாக விரைந்து செல்லும். 3. கீழ் விழும் பந்தெறி (Drop Ball) இதற்குரிய பந்தின் பிடி முறையானது, மேலுயர் பந்தெறிக்குள்ளது போல்தான். இரண்டுக்கும் அடிப்படைத் தன்மையானது பிடி முறையில் இருந்