பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 హ్రీ மென் பந்தாட்டம் வளர்ச்சியும் மலர்ச்சியும் 1908ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட விதிகள் அவ்வாறே தொடர்ந்து வந்தன. பயன் நல்கின என்றாலும், அவை 1959ஆம் ஆண்டு வரை நீடித்து, மேலும் ஒரு சில, சிறுசிறு மாற்றங்களைப் பெற்றுக் கொண்டு வழிநடத்திச் சென்றன. இதனால் நாடு பூராவும் நன்னடை பயின்ற ஆட்டம், வெளி நாடுகளுக்கும் பயணம் புறப்படும் அளவுக்கு வளமான வளர்ச்சி யையும் மலர்ச்சியையும் அடைந்து கொண்டது. இதன் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டு, இளைஞர்களிடையே எழுச்சிமிக்க ஆட்டமாக வளர்த்துவிட்ட பெருமை (Balls and Strikes) என்ற மாத இதழுக்கும் உண்டு. இவ்வாறு பத்திரிக்கையாளர் களாலும், பெரும்பணக்காரர்களின் பேரன்பினாலும் மென்பந்தாட்டம் மேன்மை நிலை அடைந்தது. ஆட்டக்காரர்களின் ஆர்வமான பங்கேற்பிலேதான், ஆட்டத்தில் திறன் நுணுக்கங்கள் (Techniques) பெருகும் வழி வகைகள் நிறைந்தன. அத்தகைய சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன, அழகு நிலை தந்தன என்று காண்போம். பந்தெறியும் ஒரு ஆட்டக்காரர் (Pitcher) ஆரம்ப நாட்களில் பந்தினை வேகமாகத்துக்கி அடிப்பதற்கேற்ற வகையில் மெதுவாகத் துக்கிப் போட்ட வண்ணம் (Lob) ஆடினார். ஒரு பந்தடி ஆட்டக்காரர் (Batter) தனக்கு சாதகமாக அடிக்கின்ற நிலையில் பந்து வரும்வரை, அதாவது தான் விரும்புகின்ற நேரம் வரை, அடித்தாடுபவராகவே காத்து நின்று ஆடிக் கொண்டிருக் கலாம் என்று இருந்தார். பந்து மேலாக வந்ததைப்