பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 51 இப் படிப்பட்ட பந்தங்களும் சொந்தங்களும், நம்மிடையே உள்ளவர்களை கொஞ்சங்கூட முன்னேற விடாதபடி பார்த்துக் கொள்ளும் பெருமை உடையன வாகும். தம் மைவிட்டு மேலே வந்து விட்டால், தங்களுக்கு அவமானம், தங்களுக்கு கெளரவக் குறைச்சல் முயற் சிப்பவர்களை தடுத்து நிறுத்து என்பதாகப் பேசிக் கொண்டு, முன்னேறுவதில் , முட்டுக் கட்டைப் போடுவதில் மிக சாமர்த்தியமாக செயல்படுவதில் கெட்டிக் காரத்தனம் கொண்டவர் களாகவே இருக்கின்றனர். ஏரியிலே கிடக்கும் பாசானைப் போல, இந்த உறவுகள், வழிமறித்து விடுவதும் உண்டு. இவற்றையெல்லாம் கடந்து வருபவன்தான் , வாழ்க்கையில் முன்னேற முடியும்! திறமை மட்டும் இருந்தால் போதாது. போதவே போதாது. எனக்குத் தெரிந்த ஒருவர் சிறப்பாக ஆர்மோனியம் வாசிப் பார். இசையில் நல்ல ஈடுபாடு உடையவர். அவருக்கு ஒரு மனைவி. தன் கணவன்மேல், அதிக அன்பு செலுத்துபவர், என்பதைவிட, ஆதிக்கம் செலுத்துபவர் என்பது தான் உண்மை. அவர் எங்கேயாவது வெளியே கிளம்பும்போது, உடனே அந்த அம்மையார், நீங்கள் எத்தனை மணிக்குத் திரும் புவீர்கள் என்ற கேள்வியைத் தான் முதலில் கேட் பார். இவரோ ஆறு மணிக்கு வந்துவிடுவேன் என்பார். வெளியே போனபிறகு, ஐந்து மணி ஆனவுடனேயே, அவர் வீட்டுக்குப் போகவேண்டும் என் பதிலேயே