பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா థ్రి 31 நேரத்தில் இனிமை நிறைந்த ஆட்டமாகத் திகழ்வதும் ஒரு காரணமாகும. 3. இது தனிமனிதனின் விளையாடும் ஆற்றலும் திறமையும் முற்றிலும் வெளிப்படுகின்ற ஆட்டமாகத் திகழ்கிறது. அத்துடன், தான் சேர்ந்திருக்கும் குழுவுடன் இணைந்து வெற்றிக்கும் பாடுபடுகின்ற ஒற்றுமை உணர்வுடன் ஆடத் துண்டும் அரிய வாய்ப்பினையும் அளித்துக் கொண்டிருக்கிறது. 4. ஒரு குழு வலிமையற்றதாக இருந்தாலும், ஒரு ஆட்டக்காரர் தனது ஆட்டத் திறமையால், அந்தக் குழுவை நன்றாக ஆட வைக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டிடச் செய்து ஆடத் துண்டுகிறது. 5. விரைந்து செயல்படுகின்ற மூளைவளம். முடிவெடுக்கும் ஆற்றல், எதையும் தீர்மானமாக எடைபோடும் அறிவு என்பதாக சில வினாடிகளுக் குள்ளே என்ன செய்ய வேண்டும் என்ற முடிவினை எடுத்து செயல்படக் கூடிய சுறுசுறுப்பான மூளை யையும் உடலையும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. 6. இயற்கையாகவே உடலுடன் தோன்றிய உணர்வுகளான எறிதல், பிடித்தல், அடித்தல், ஒடுதல், தடுத்தல் போன்ற இயக்கங்களுக்கு ஈடு கொடுக்கும் படியான வகையில் இந்த ஆட்டம் அமைந்திருப்பதும் காரணமாகும். 7. அதிக சுறுசுறுப்புடன் ஒரு ஆட்டக்காரரை ஆட வைத்தாலும், அயர்ந்து போய் விடக் கூடிய அளவுக்கு ஆட்டி வைத்திடும் ஆட்டமுமல்ல. இயக்கத்திலே ஓர் இன்ப நிலையை ஊட்டுவிக்கும் ஆட்டமாகவே விளங்குகிறது.