பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 <> மென் பந்தாட்டம் வேண்டும். அப்பொழுது சலனமில்லாமல், உணர்ச்சி வசப்படாமல் அமைதியான மனமுடையவராக இருப்பது மிகமிக அவசியமாகும். 2. பதட்டப்படுவதும், 'என்னவோ நடந்துவிடும்’ என்று கற்பனை மனத்தினராய் அங்குமிங்கும் அலைந்தவாறு படபடப்புடன் இயங்கி நிற்பதும், அடித்தாடும் நிலைமையையும், வலிமையையும் வெகுவாகக் குலைத்துவிடும். ஆகவே, "வந்துவிட்டோம் அடித்தாட, வருவதை ஏற்றுக் கொள்வோம்’ என்ற 'எதையும் தாங்கும் இதயத்தினராய் நின்றிருக்க வேண்டும். 3. அடித்தாடும் மட்டையை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இறுக்கமாகப் பிடித்திருக்கக் கூடாது. அவ்வாறு, அழுத்திப் பிடிப்பதால் தசைகளும் உணர்ச்சி வசப்பட்டு உணர்ச்சி மயமாகிவிடுவதால், அடிக்கும் பொழுது தசைகள் அவ்வளவாக எளிதில் ஒத்துழைக்காமல் போய்விடும் அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. 4. அடித்தாடும் மட்டையை பின்னோக்கிக் கொண்டு சென்று விட்டு, அங்கிருந்தபடியே அடித்தாடத் தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி முன்னும் பின்னும் ஆட்டி அசைத்துக் கொண்டு நிற்கக் கூடாது. அது மனதின் ஒன்றிய ஒருமுக நிலையைக் (Concentration) கெடுத்து விடும். 5. ஒரு சிலர் மட்டையைத் தரையில் படும்படி வைத்து நின்று ஆடுவதும் உண்டு. அடித்தாடுபவர் எப்படி வைத்துக் கொண்டு நின்றாலும், அவர் சதிராடாத நெஞ்சினராய், சாந்த நிலையில் தான் இருக்க வேண்டும் என்பதை எல்லோரும் மறந்துவிடக்கூடாது.