பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 13 பார்வையாளர்களின் பெருவாரியான கூட்டத்தை சமாளிக்க முடியாததால், அவர்களைக் கட்டுப்படுத்து வதற்காக நுழைவுக் கட்டணம் வசூலித்தும் கூட, கூட்டம் குறையவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அவ்வாறு வசூல் செய்த பணத்தை, விளையாட்டு வீரர்கள் கைச் செலவுக்காகப் பகிர்ந்தளித்தார்கள். இவ்வாறு தளப்பந்தாட்டம் ஆண்களையும் பெண் களையும், இளைஞர்கள், சிறுமிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கின்ற கவின்பெறு ஆட்டமாக விளங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான், விநோதமான நிகழ்ச்சி ஒன்று அமெரிக்காவிலே நடந்தது. அதுவே, மென்பந்தாட்டம் பிறப்பதற்குக் காரணமாகவும் அமைந்துவிட்டது. கையுறையும் விளக்குமாறும் 1887ம் ஆண்டில் ஒரு நாள் சிகாகோ நகரத்தில், ஃபாரகாட் படகுச் சங்கம் (Farracut Boat Club) என்ற ஓர் அமைப்பு இருந்து வந்தது. அந்த சங்கத்தின் ஆண்டு முடிவில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டிருந்தது. அதற்காக அதன் அங்கத்தினர்கள் அனைவரும், உள்ளாடும் அரங்கம் (Gymnasium) ஒன்றில் கூடினார்கள். கூட்டம் தொடங்குவதற்கக் கொஞ்ச நேரம் இருந்தது. கூடியிருந்த இளைஞர்களுக்கோ பொழுது போகவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. அந்த நாளில் மிகவும் பிரசித்துப் பெற்று விளங்கிய தளப்பந்தாட்டத்தை ஆடலாம் என்றாலோ இடம் போதாது. அவர்கள் இருந்த இடம் உள்ளாடும் அரங்கம்தானே! அதற்கள் விளையாட முயற்சித்தாலும்,