பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 79 உள்ளவர்கள் உலகத்திற்கு உதவ முடியாமல் போகிறார்கள். 3. பணபலம் உள்ளவர்கள்: பணபலமிருந்தால், வாழ்க்கையில் உயர்ந்து விடலாம் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் பணம் வந்த பிறகுதான் பணக்காரனுக்கு, உண்மையான கஷடங்களே உண்டாக ஆரம்பிக் கின்றன. அந்தப் பணத்தைச் சேர்த்துவைப்பது, பாதுகாப்பது என்பதும் துன்பம். சேர்த்து வைத்த பணம் மற்றவர்களால் பறிக்கப்பட்டு விடக்கூடாதே என்று எண்ணிக் காப்பதில் பெருந்துன்பம். பிறகு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என்று இனந்தெரியாத ஒரு பயம். பணக்காரர்கள் எல்லோரும் சீமான்கள் ஆகிவிடுகிறார்கள். அதில் என்ன நுட்பமான இரகசியம் என்றால், பணம் வந்து கொண்டே இருக்க வேண்டும். வந்த பணம் போய் விடக் கூடாதே என்பதற்காக, ஆண்டவனிடம் வற்புறுத்திக் கடுமையாக வேண்டிக் கொள்வது. அது மற்றவர்களுக்குப் பக்தியாகத் தோன்றுகிறது. ஆனால் உள்ளுக்குள்ளே போராட்டமாக வெடித்துக் கொண்டு இருக்கிறது. பணபலம் உள்ளவர்கள், தங்களுக்கு எல்லாம் தெரியுமென்று நினைக்கிறார்கள். எதையும் செய்து காட்ட முடியுமென்று நம்புகிறார்கள். எதிலும் தலைமை தாங்கிக் காட்டமுடியும் என்றும் தங்களைப் பிரமாண்டமாக நினைத்துக் கொள்கிறார்கள்.