பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7Ο டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பல ஏமாற்றங்களைச் சந்தித்து, கடைசியில் வீட்டிலிருந்த அண்டா, குண்டா, வீட்டிலிருந்த பாத்திர பண்டங்கள் எல்லாம் அடகுக் கடைக்குப் போய், அட்டத் தரித்திரத் தில் ஆழ்ந்துபோன ஒரு வாழ்க்கையும் ஒன்று உண்டு. அந்த அவதிச் சூழ்நிலையிலிருந்து மீண்டுவரக் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஏற்படுகிற சாதக வாழ்க்கையையும், பாதக வாழ்க்கையையும் நான் பொருட்படுத்தாததற்குக் காரணம். ஏற்கனவே நான் எடுத்திருந்த முடிவு. எந்தச் சூழ்நிலையிலும் நான் துணிந்து முன்செல்வேனே தவிரப் பயந்து பின் வாங்கவே மாட்டேன். இப்படி நான் எடுத்துக் கொண்ட உறுதிதான் என்னை இன்று நன்றாக வாழவைத்துக் கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் சிலருக்கு நம்பிக்கையே வாழ்க்கையாக இருக்கும். உழைப்பே மூலதனமாக இருக்கும். உறுதிவாய்ந்த மனமே உற்சாகம் ஊட்டுவதாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த வெற்றியிருக்காது. எதிர்பார்த்த புகழ் இருக்காது. சாதாரண ஒரு மனிதன் பெறுகின்ற சந்தோஷமான வாழ்க்கைகூடச் சில சமயங்களில் இல்லாமல் போய்விடும். இதோ என் எதிரிலே இருந்து எழுதிக் கொண்டு இருக்கும் அடைக்கலம் அவர்கள் நாற்பதெட்டு ஆண்டுகால இலக்கிய அனுபவங்கள் உள்ளவர். அவர் பழகாத பண்டிதர்கள் இல்லை. பத்திரிக்கைக் காரர்கள் இல்லை. பணக்காரர்கள் இல்லை. அடையாத அனுபவங்கள் இல்லை. அறிவாற்றலில் உயர்ந்தவர். தமிழறிஞர். அவரின் முயற்சிகள் இலவம் காயாகக்