பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

விடை எழுதி வெற்றி பெற்றாலும், வாய்மூலமாகக் கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும் வழவழா என இல்லாமல் உடனுக்குடன் தெளிவாகக் கூறியும், கேட்பவர்களுக்கு மனத் தெளிவினை உண்டாக்கும் திறனும் வேண்டும் நிறக்குருடு இல்லாத கண்ணுேட்டம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

இத்தனையிலும் வெற்றிபெற்று வந்துவிட்டால்மட்டும் சிறந்த நடுவராகப் புகழ் பெற்றுவிட முடியுமா? மனிதர்களுடைய குணாதிசயங்களையும் அவர்களது குணநலங்கள், உளப்பாங்கு பற்றியும் அறிந்து வைத்து, அவர்கள் ஆடுகின்ற நேரங்களில் பெறுகின்ற உணர்ச்சிகளுக்கு ஏற்ப நெளிந்து கொடுக்கும் தலைமைப் பண்பாளராகவும், உடல் திறம் கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும்!

இவ்வாறு, சிறப்பான பதவிகளிலும், பொறுப்பான கடமைகளிலும் சிறந்து விளங்கும் ஆற்றல்களிலும் தர முள்ளவர்களே நடுவராகப் பணியாற்ற முன் வருகின்றார்கள்; ‘அன்றாட வாழ்க்கையின் கடுமைகளை அலட்சியப்படுத்தி, மறந்து, மன நிம்மதி பெறவும், புத்துணர்ச்சியும் பூரிப்பும் பெறவுமே வருகிறோம்’ என்று நடுவர்கள் கூறுவது உண்மை தானே !

இத்தகைய அதிகார பூர்வமான கடமையுடன், உரிமையுடன் தமது வேலை முடிந்து பறந்து வருகின்றவர்கள் வந்ததும் வராமலும் தமக்குரிய கடமைகளிலேயே தம்மை மறத்து மூழ்கி விடுகின்றனர்.

விளையாடுகின்ற ஆடுகள மைதானத்தை ஒரு முறை சுற்றிப்பார்த்து, அதில் குறித்துள்ள குறியீடுகளைக் கண்காணிக்கின்றார்கள். ஆடுதற்கு மைதானம் தகுதியா என அறிந்த பிறகு, குறைகளிருந்தால் நிவர்த்தி செய்த பிறகு, தேவையானவற்றைத் தேடிச் சென்று தயார் செய்ய