பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. உலகம் காக்கும் உயிர்க் கல்வி அழுதுகொண் டே பிறந்து, அழுதுகொண்ட இறக்கும் மனித இனம், வாழ்க்கை முழுதும் சிரித்துக்கொண்டே வாழ வேண்டுமானால், வளம் நிறைந்த உடலும், நலம் நிறைந்த உள்ளமும் இணைந்து அமையப் பெற்றிருக்க வேண்டும். பணியும் பகுத்தறிவும், பண்பாடும், பாரில் பெருமையை யும் புகழையும் அளிக்கிறது என்ற நிலைமாறி, குறையாத பொருள் வளமும் குன்றாத நல உரிமையுமே மக்களால் ஏற்றிப் போற்றப்படுகின்றது. எனவேதான் "பணம்பத்தும் செய்யும்' என்று பேசிப் பேசி பணத்தை ஈட்டுவதற்கு முயன்று, பணத்துடன் கவலையையும் மற்றுமுள்ள நோய் வகைகளையும் ஒன் றாக ஈட்டி, வாழ் நாள் முழுதும் துன்பகத் துடன் போராடிக் களைத்து, களையிழந்து மடிகின்றனர்.