பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


உடற் கல்வியின் பெருமையை உலகம் உணர்கிறது. போற்றுகிறது, அதன் கொள்கைகள் உலகினம் சிறக்க உயர்ந்த வளம் கொழிக்க, சிந்தை இன் பத்தால் செழிக்க பாடுபடுகின்றன. இதன் பணியை எல்லா நாடுகளும் போற்றி னாலும்; நம்மவர் அதனை உணர மறுக்கின்றனர். உணர்ந்தாலும் ஏதோ சில காரணங்களைக் கூறி வெறுக் கின்றனர். அறிவியலால் ஆக்கமும் அழிவும் உண்டு என்றாலும், அதன் நிறையை அவர்கள் போற்றுவது போல, குற்றம் நாடுவது போல குணத்தை நாடவும் அவர்கள் தலைப் பட வேண்டும். மாற்றாந்தாய்ப் பிள்ளையைப் போல உடற் கல்வி ஒதுக்கட்படுவது. மனித குலத்திற்கே தீங்கினை வழங்குவதாகும். குடியரசு எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. ஆனால் குடியரசு சில நேரத்தில் தடிய ரசாவதையும் பிறகு முடியர் சாவதையும் இன்று நாம் காண் கிறோம். ஆனால் குடியரசே வேண்டாமென்பவருக்கு முழுமன வளர்ச்சி யில்லையென்று கொள்ளலாமே தவிர, குடியரசு நடைமுறைக்கு உதவாதது என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாம் செல்லக்கூடாது. குடியரசு எங்கும் போற்றப்படுகின்ற இந்த நேரத்தில் குடிய ரசில் ஒவ்வொரு தனி மகனை யும் குடியரசின் குடி மகனாக, சிறந்த மகனாக ஆக்கும் பணியை உடற் கல்வி தன் கொள்கையால் வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது என்றால் அது எல்லோருக்கும் வியப்பாகத்தானிருக்கும். இனி அதன் பணியைக் காண்போம். மக்களால் மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியே குடியர சாகும். மக்களாட்சியின் முதல்படியானது சமநிலையாகும். நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் சமத்துவத்தை சரி நிலையினை அடையும் வாய்ப்பினை ஏற்படுத்தித் கொடுட்பதே குடியரசின் நோக்கமாகும். எல்லா மக்களும் சமமாகவே. படைக்கட்பட்டிருக்கிறார்கள். அது போலேவே உடற் கல்வி