பக்கம்:குண்டான உடம்பை குறைப்பது எப்படி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குண்டான உடம்பைக் குறைப்பது எப்படி?

65


கோளாறுகளையும், குழறுபடிகளையும் கூட்டிக் கொண்டு வந்து விடுகின்றன. பளிச்சென்று போடுகிற விளக்கைப் பார்த்தால், படுசத்தமான ஒலியைக் கேட்டால், அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒற்றைத் தலைவலி உள்ளவர்கள் பல சமயங்களில் உண்ணுகிற உணவினால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வாமையும் அதன் விளைவுகளும்

ஒவ்வாமையானது உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, அதன் சில்மிஷ வேலையைக் காட்டத் தொடங்கி விடுகிறது. தொண்டையில் ஏதோ அருவுவது போல ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி வாந்தியெடுக்க வைத்துவிடுகிறது. இதனால் வாயும் தொண்டையும் கடுமையாகப் பாதிக்கப்படு வதுடன், வயிற்றில் ஒருவித எரிச்சலும் ஏற்பட, சுவாசம் தடைப்படுவது போன்ற உணர்வும் உண்டாகிறது. கண்ணீரும், சளியும் சேர்ந்து கொள்வதால், இதயத் துடிப்பு அதிகமாகி விடுகிறது. சில ஒவ்வாமை உணவைச் சாப்பிட்டு சிலமணிநேரம் கழித்து ஏற்படுகிறது. அதனால் வாந்தியும், பேதியும் ஏற்படுகிறது. சில சமயங்களில் கடுமையான தலைவலியும் உண்டாகிறது.

என்ஸிமாவும், ஆஸ்மாவும் உணவினால் மட்டும் உண்டாகி விடுவதில்லை. புழுதி, தூசி, மென்மயிர் மற்றும் தோல்வாசனை அல்லது சுவரைச் சுற்றியுள்ள விரும்பத்தகாத சூழ்நிலைகள் இவற்றாலும் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது. எதனால் இது ஏற்படுகிறது என்பதை நன்றாக அறிந்து கொண்டபின்புதான் மருந்து தர வேண்டும்.