பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சுமையாக இல்லாமல் சுவையான விஷயங்கள் உள்ளதாகவும். புத்தகங்கள் இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் நாளைய குழந்தைகளின் பெற்றேர்கள்" என்றும் கூறுவார்கள். இன்றைய இளைஞர்கள். நாட்டின் நாளேய தலைவர்கள் மட்டுமல்ல. சரித்திர நாயகர் களும் ஆவார்கள், பாலர்களின் மனம் பதமான மண்போன்றது. பச்சை மூங்கிலப் போன்றது. பதமான மண்ணைப் பயன்படுத்தி. பக்குவமான பாண்டங் களைச் செய்யும் பண்புள்ள சய வர் போல, தீயிலே பச்சை மூங்கில இட்டு தேவைக்கேற்ப நேராக நிமிர்த்தி விடும் சேர்ந்த வேலைக்காரர்கள் போல. பாலர்களை நம் பாரதத்தின் மேன்மைக்காக உழைக்கும் பக்குவத்தை நூல்கள் மூலமாக நாம் உருவாக்க வேண்டும். தியாகம் என்ற பரந்த மனப்பான்மையையும், சிறந்த பண்பாட்டையும் பெருககுகின்ற நூல் களையே, பதிப்பகத்தார் அனைவரும் படைத்திடல் வேண்டும். நீரானது பூவிலே புகுந்து தேனுகிறது. பழத்திலே புகுந்து சாருகிறது. சிப்பியில் புகுந்து முத்தாகிறது. ஆவியாக மாறி மேகமாகி மழையாகிறது. நீரானது தான் புகுந்த இடத்தின் மேன்மையைப் பெறுவதுபோலவே, அறிவினை நாடும் இளைஞர்களின் நெஞ்சங் கள் மேன்மையடைய நூல்கள் உதவ வேண்டும். நூல்களைப் பதிப்பிக்க நிச்சயம் பணம் தேவை தான் பதிப்பகத்தார் இதனை ஒரு வியாபாரமாகக் கருதத்தான் வேண்டும். வியா பாரம் என்று எண்ணிவிட்டால், லாபம் என்பதையும் அவசியம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். லாபம் என்று எண்ணிவிட்டால், ஆசையும் கொஞ்சம் அதிகமாகவே ,