பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி



இல்லறத்தில் ஈடுபட்ட இருவரும், உடலால் இணைந்து அன்பைப் பகிர்ந்து கொண்ட நேரம் போக, மற்ற எல்லா நேரங்களிலும் மனத்தால் தான் பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும். மனத்தினால் எப்படி வாழ முடியும்? மனம்என்பதுஉணர்வுடன் நிறைந்த மாபெரும்கடலாகும்.அதிலே,நொடிக்கொரு நினைவலைகள் நிறைந்து பொங்கித் துள்ளி, முன்னேறிக் கொண்டேவரும். அலைகளின் வேகத்திற்கேற்ப மனநிலை மாறுபடும். அவ்வாறு ஆழ்ந்து எழுகின்ற அலைகளை அறிவு கொண்டு அடக்கி, சீராக சிறப்பாக செயல்பட வேண்டியது தான் தம்பதிகளின் கடமையாகும்.

அதனால்தான், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். என்று முன்னமேயே கூறினேன்.

கணவனது இல்லத்தை ஆள்பவளாக, உள்ளத்தில் வாழ்பவளாக மனைவி என்று மங்கள பெயருடன், புனிதப் பயணமாகிய வாழ்க்கையை மேற்கொள்ள ஒரு பெண் வருகிறாள்.

வருகின்ற மங்கையிடம் பெறுகின்ற சுகமும் சொர்க்கமும் தருகின்ற அன்பும் இன்பமும் இருவருக்குமே சொந்தம் என்பதைவிட, அவர்களைச் சார்ந்துள்ள உற்றார் உறவினர்களுக்கும் உண்டு என்பதை அவர்கள் உணர வேண்டும். தம்பதியர் மகிழ்வாக வாழவேண்டும் என்பது தானே சுற்றத்தாரின் ஆசை!

இவ்வாறு, வாழ வருகின்ற பெண்ணுக்கென்று, தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கள் உண்டு. எண்ணங்கள்