பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையான

87


மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், கணவன்தான் முயற்சிக்க வேண்டும் என்கிறீர்களா? மனைவிக்கு எந்தவிதமான பொறுப்பும் இல்லையா மாமா?

இரண்டு கைகளும் தட்டினால் தான் ஒசை. இரண்டு விழிகளும் பார்த்தால்தான் காட்சி. இதை என்றும் மறந்து விடக்கூடாது வாசு.

மனைவியும் கணவனுடன் ஒத்துழைத்தால்தான் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். ஆகவே, மனைவி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சில குறிப்புக்களைக் கூறுகிறேன்.

மனைவியானவள், தன் கணவன் தன்னை மனமார நேசிக்க வேண்டும் என்று விரும்புவது போலவே, தானும் தன் கணவனை உளமார நேசிக்க வேண்டும். மனமார மதிக்க வேண்டும்.

கணவனது லட்சியங்களை, நோக்கங்களை, கருத்துக்களைப் புரிந்துகொண்டு அவைகளுக்கேற்ப கணவனுடன் ஒத்துழைப்பதுதான் கற்புள்ள மங்கைக்கு கடமையாகும்.

தன்மேல் படுகின்ற சூரிய ஒளியை உடனே அழகாகப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியைப் போல, தன்மீது அன்பு செய்யும் கணவனுக்கு தங்குதடையில்லாமல், திருப்பித் தந்து திருப்திபடுத்தும் பொறுப்பை மனைவி நன்கு ஏற்று, அதன் வழி நடக்க வேண்டும்.

ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பார்கள். அடிக்கடி நெருங்கிப் பழகுவதற்குரிய வாய்ப்பு தம்பதிகளுக்கு இருக்கிறது. பழகப்பழகப் பாலும் புளிக்கும். அதுபோன்ற எண்ணம் மனதில் இடம்பெறும்படி நடந்து