பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 ஏன் கொடுமை என்ருள்? கற்க வேண்டிய காலம் இளமைக் காலம் என்பதால் தான். முத்தை விளேக்கின்ற சிப்பியானது, மழைக்காக வாய் பிளந்து காத்திருப்பது போல, கற்ப வர்கள் இருக்க வேண்டும். மனிதகுலத்தைக் காக்கின்ற நாளேய சிற்பிகளை இன்று உரு வாக்குவது கல்வியல்லவா ! இந்த நிலையில், இணையற்ற காலமாக விளங்குகிறது இளமைக்காலம், பசுமரத்தில் ஆணி பதிவது போல, பிஞ்சு நெஞ்சிலே கல்வியும் பதியும் . ஆகவே, சிறுவர்கள் நெஞ்சர் தான் அ றிவுக்கு ஊற்று. இங்கு ஊறுகின்ற அறிவு நீர், இனிக்கும் கனேயாகும். குதிக்கும் அருவியாகும். இசைபாடும் ஆருகும். எழிலாகத் தவழும் நதியாகும் ஆடி அலைபாயும் அகன்ற கட லாகும். இங்குதான் வாழ்வு எனும் கப்பல் செம்மசந்து செல்லும். இந்த இனிய நிலையை இணைப்பது நல்ல நூல்களே! தினை விதைத்தால் தினே. வினை விதைத்தால் விகன என்பது பழமொழி. வினையை விதைத்து விட்டு தினையைத் தேடி ல்ை கிடைக்காது. தேவையானதைத் தேடி விதைக் க வேண்டும், அதையும் தரமாக, நல்ல இடமாகத் தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். விதையிலே பழுதிருந்தால், முடிவிலே பதர்தான் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கற்கக் கசடற என்பதும் மிக முக்கியம். கசடு இல்லாமல் எப்பொழுது கற்க முடியும் ? கற்கப் பயன்படுகின்ற நூல்கள் கசடில்லாமல் அதாவது குற்றங் குறைகள் இல்லாமல் பூரண நிலவு பேல பெருமையுடன் விளங்கும் போதுதான். கற்கும் இளைஞர்கள் இதயத்திலே இனிய மொழி பேசுவன வாக, இனிய வழி காட்டுவனவாக நூல்கள் இருக்க வேண்டும்.