பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82


போர்க்களத்தில் பெற்ற வெற்றிக்கு நினைவுச் சின்னமாய் தொடங்கிய Trophy, இ ன் று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்களுக்கு, மகிழ்வு தரும் நினைவுப் பரிசாக விளங்கி வருகிறது.

25. ஓய்வு (Leisure)

ஒய்வு என்பதற்குரிய ஆங்கிலச் சொல் லீஷர் என்பதாகும். அது வளர்ச்சி பெற்று இவ்வாறு உருவானதை இனிக் காண்போம்.

ஸ்கோல் (Scole) என்பது கிரேக்கச் சொல். அதற்கு, 'அறிவார்ந்த உரையாடல் நடைபெறும் இடம் என்பது பொருள். இந்த ஸ்கோல் எனும் சொல்தான், ஸ்கூல் என்பதற்கும்,ஸ்காலர் (Scholar) அதாவது அறிவுள்ளவர் என்பதற்கும் தொடர் புடையதாக விளங்குகிறது.

அத்தகைய அறிவு பூர்வமான, அறிவு சார்ந்த உரையாடல்கள் நடைபெறும் இடத்தை, கிரேக்கர்கள் 'லிசியம்' (Lyceum) என்று அழைத்தனர். அதற்குக் காரணமும் இருந்தது.

லீசியம் என்ற இடத்திற்கு பெரும் பணக்காரர்கள், வாழ்க்கையில் வளமான வசதி