பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அமைப்பு அதற்கேற்றாற் போல இல்லை என்பதும், நீண்ட கழியினைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்து, தோள்களின் வலிமையால் கோலை ஊன்றி அந்தரத்தில் நின்று தாவிக் குதிப்பதானது தோள்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், தோள்களைப் பாதிக்கக்கூடாது என்பதாலும்; மூன்று முறை தாண்டித் தாண்டிக் குதித்துத்தாவும் முறையாக மும்முறைத் தாண்டும் நிகழ்ச்சி அமைந்துள்ளதால், அப்படிக் குதிப்பது இடுப்பெலும்புகளைத் தாக்கும், விபத்தினை உண்டாக்கும் என்ற உடலமைப்பு கருதியே தவிர்க்கப்பட்டிருக்கின்றன என்பார்கள் உடற் கூறு வல்லுநர்கள்.

மென்மையான, கவர்ச்சியான முகத்திலே குத்திக் கொண்டு, இரத்தம் வழிய நிற்பதும், அன்பே வெளிப்படும் அழகு சாதனங்கள் ஆங்கார சொரூபங்களாக, அக்கினிப் பிழம்புகளாக விளங்கிக் கிடப்பதும், நினைப்பதற்கே சங்கடமாகத் தெரிகின்றதே! மெருகேறிய மெல்லிய உடல்களை கட்டிப் பிடித்து, பிடி போட்டு, மடக்கி, கசங்கிக் காட்சி தரும் மல்யுத்தங்கள் மங்கைகளுக்கு வேண்டாத ஒன்றுதான்.

ஒலிம்பிக் பந்தயங்களிலே முடி சூடாத மன்னனாகவும், உலக அரங்கிலே ஒப்பற்ற ஓட்டப்பந்தய வீரனாகவும் திகழ்ந்த அமெரிக்க வீரன் ஜெசி ஓவன்ஸ் ஒரு முறை இந்தியாவுக்கு விஜயம் செய்த போது, எதிராஜ் மகளிர் கல்லூரியில் ஒரு பாராட்டு