பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா హ్రీ 29 பந்தாட்டத்தில் இரண்டு தளங்களுக்கிடையே உள்ள துரம் 60 அடியாகும். 2. அடுத்த வேறுபாடு பந்தெறியும் தூரத்திலிருக்கிறது (pitching Distance). 356TL's Lisāghsil L 3,369, LjäGløgju. நிற்கின்ற துரம் 60 அடி 6 அங்குலமாகும். மென் பந்தாட்டத்தில் பந்தெறியாளர் நின்று எறியக்கூடிய தூரம் 46 அடியாகும். 3. தளப் பந்தாட்டத்தில் பயன்படுகின்ற பந்தின் எடையானது அது சிறிய அளவில் உள்ளது. அதன் எடை 5 அவுன்சிலிருந்து 5% அவுன்சுக்குள்ளாக இருக்க வேண்டும். ஆனால் மென் பந்தாட்டத்தில் பயன் படுகின்ற பந்தானது பெரியதாகவும் எடையுள்ளதாகவும் அமைந்திருக்கிறது. இதன் எடை 6 அவுன்சுக்குக் குறையாமல் 6% அவுன்சுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சுற்றளவானது 11 7/8 அங்குலத்திற்குக் குறையாமல் 12 1/8 அங்குலத்திற்கு மிகாமலும் அமைந்திருக்க வேண்டும். 4. தளப் பந்தாட்டத்தின் பந்தடி மட்டையைவிட மென்பந்தாட்டத்தின் பந்தடி மட்டை அளவில் சிறியது. எடையில் குறைந்ததாகும். இதன் நீளம் 34 அங்குலத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதன் அகலப் பரப்பானது 2 1/8 அங்குல விட்டத்திற்கு மேல் போகாமல் அமைந்திருக்க வேண்டும். தளப் பந்தாட்ட மட்டை 42 அங்குல நீளத்திற்கு மிகாமலும், அகலமான பகுதியில் 2% அங்குலத்திற்கு மேல் போகாமலும், 34-39 அவுன்சுக்குள்ளான எடையிலும் இருக்க வேண்டும். 5. தளப் பந்தாட்டத்தில் 'முறை ஆட்டங்கள்’ (Innings) 9 ஆகும். மென் பந்தாட்டத்தில் 5 முறை ஆட்டங்களே உண்டு.