பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 థ్రి மென் பந்தாட்டம் முதல் முறை: இயல்பான முறை. இது எல்லோரும் பிடித்திருக்கின்ற முறைதான் (Standard). இதில், மட்டையின் கைப்பிடி ஆரம்பத்திலிருந்து மேல் நோக்கி ஒன்று அல்லது இரண்டு அங்குல தூரத்தில் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு ஆடுவது. இந்தப் பிடிமுறை. நன்றாக அடிப்பதற்கேற்ற வலிமையையும், நினைத்த இடத்திற்குக் கட்டுப் பாட்டுடன் பந்தை அனுப்புவதற்கேற்ற இலாவகத் தையும் அந்த ஆட்டக்காரருக்கு அளிக்கின்றது. இரண்டாம் முறை: மட்டையின் அடிப்பாகத்தில் பிடிக்காமல், குறியிருக்கும் (Trademark) இடத்தில் இரண்டு கைகளாலும் மட்டையைப் பிடித்துக் கொண்டு, ஆடுபவர் உண்டு. இதை மையப்பிடி (Choke grip) என்றும் அழைப்பார்கள். ஆட்டத்தில் அதிக அனுபவம் நிறைந்த ஆட்டக் காரர்கள், விரைவாக எறியப்பட்டு வரும் பந்தை வேகமாக அடிக்கவும், இடம் பார்த்துப் (Gap) பந்தை அடித்துவிட்டு ஒடவும், இந்தப் பிடி முறையினால் பயன் பெறுகின்றார்கள். கனமுள்ளதாக மட்டை இருந்தாலும் இதே பிடிமுறையைத்தான் பழகியவர்கள் பின்பற்றி ஆடுகின்றார்கள். மூன்றாம் முறை: மட்டையில் உள்ள குமிழ் ஒரத்தில் அதாவது அடிப்பாகத்தில் பிடித்துக் கொள்வது. இதற்கு துரக் கைப்பிடி (Long grip) என்று பெயர். எந்தப் பிடிமுறையைப் பின்பற்றி ஆடினாலும், இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். சற்றுத் தளர்வாக ஆரம்பத்தில் பிடித்திருந்து, பந்துடன் தொடர்பு கொள்ளும்போது மட்டும் சற்று இறுக்கமாகப்