பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 స్ప్రే மென் பந்தாட்டம் விடுவதுடன், அவர்களுடன் கலந்துரையாடி, ஒவ்வொரு வரது கடமையையும் விளக்கி, எவ்வாறெல்லாம் அவற்றைப் பின்பற்றி வரவேண்டும் என்பதையும் விளக்கிட வேண்டும். 3. குறிப்பாளரிடம் (Scorer) பேசி, குறிக்கப் பட்டிருக்கும் ஆட்டக்காரர்களின் பெயர்கள், அவர்களது ஆடும் வரிசை, யார் முதலில் ஆடத் தொடங்குகின்றார் என்பன போன்ற விவரங்களையும் கண்டு தெரிந்து கொண்டு, அவருடன் குறிப்பாளர் எப்படி இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதையும் விவரமாகக் கூறி ஏற்கச் செய்திட வேண்டும். 4. விளையாட இருக்கின்ற ஆடுகளம் பற்றி ஏதாவது புதிய விதியமைப்பினை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமைந்தால், அதனை இரு குழுவினரும் புரிந்து கொள்ளுமாறு முதலில் விளக்கிட வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டபின், ஏற்றுக் கொண்ட விதிகளை ஒரு காகிதத்தில் தெளிவாக எழுதி, இரு குழுத்தலைவர்களின் கையொப்பங்களையும் பெற்றுக் கொண்டுவிட வேண்டும். 5. பிறகு, இரு குழுத் தலைவர்களையும் அழைத்து, இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்து, நாணயம் சுண்டியெறிவதின் மூலம் யார் முதலில் அடித்தாடத் தொடங்க வேண்டும் என்பதையும் நிர்ணயம் செய்ய வேண்டும். 6. அதன் பின்னர், பந்தெறிபவர் யார், பிடிப்பவர் யார் என்பன போன்ற விவரங்களைத் தெரிந்து மற்ற குழுவிற்கு அறிவிக்க வேண்டும்.