பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.நவராஜ் செல்லையா ઉંટ્રો- 93 பந்தெறிபவர் நிற்கும் கட்டத்திற்கு இணையாக இருக்கும் பகுதிகள் 8% அங்குல நீளம் இருக்க வேண்டும். பிடித்தாடுபவர் (Catcher) நிற்கும் பகுதியினை நோக்கியுள்ள பகுதி 12 அங்குல நீளம் உள்ளதாகக் குறிக்கப்பட வேண்டும். 4. Lu 5Qlg5óluqüb si Lib (Pitcher's Plate) பந்தெறிபவர் நின்றெறியும் கட்டமானது மரப் பலகையால் அல்லது ரப்பரால் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அது 24 அங்குல நீளமும் 6 அங்குல அகலம் உடையதாகவும் இருக்க வேண்டும். அதன் மேற்பகுதி தரையோடு தரையாக இருப்பதுபோல் தான் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அடித்தாடும் தளம் காட்டும் எல்லைக் கோட்டின் வெளிப்புறப் பகுதியில் இருந்து 46 அடி தூரம் ஆண்கள் ஆட்டத்திற்கும், 40 அடிதுரம் பெண்கள் ஆட்டத்திற்கும் என்றும் குறித்து வைக்கப்படல் வேண்டும். 5. 55mmisén (The Bases) ஒவ்வொரு தளமும் 15 அங்குல நீள அகலமுள்ள சதுரக்கட்டம் போல, கேன்வாஸ் அல்லது அதற் கிணையான பொருத்தமான பொருட்களால் ஆக்கப் பட்டு, தளங்களுக்குரிய இடங்களில் நகராமல், சிறந்த முறையில் தைக்கப்பட்டிருக்க வேண்டும். 3. பந்தடித்தாடும் தளம் (Home Plate) ரப்பரால் அல்லது அதற்கிணையான பொருத்தமான பொருளால் ஆக்கப்பட்டிருக்கும் பந்தடித்தாடும் இளமானது, பஞ்சமுகம் (Five Side) கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும்.