பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ဒါ့ငဲ့ - மென் பந்தாட்டம் கைப்பிடியில் சற்று தளர்வாக இருப்பது போல் பிடி அமைந்திருக்கும். ஒரு கை கைப்பிடியின் தொடக்கத்தில் இருக்க, மற்றொரு கையானது மட்டையின் நடு மையத்தில் இருப்பது போல் பிடித்திருக்க வேண்டும். இவ்வாறு நின்று தொட்டாடுவதின் ரகசியம் என்னவென்றால் எறிபவர் எறிந்து வருகின்ற பந்தின் வேகத்தைத் தணிப்பதுபோல் பந்தைத் தடுத்து, அந்த இடத்திலேயே விழச் செய்துவிடுவதுதான். இதில் என்ன பயன் என்றால், தடுத்தாடுபவர்கள் எல்லோரும் தூரத்திலே நின்று கொண்டிருப்பதால், எளிதாகத் தளம் நோக்கி ஒட வாய்ப்பாக இருப்பதுதான். அதனால்தான், மட்டையைத் தளர்வாகப் பிடித்திருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அவ்வாறு பிடிப்பதானது பந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திவிடவும், நினைத்த இடத்தில் பந்தை விழச் செய்யவும் கூடிய சக்தியையும் சாதுர்யத்தையும் அளித்துவிடுகின்றது. இதில் ஈடுபடும் ஆட்டக்காரர், பந்தைத் தொட்டாடிய உடனேயே, தளம் நோக்கி ஓடிவிட வேண்டும். முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும் ஆள் இருந்தால் இவர் மூன்றாம் தளம் பக்கமாகப் பந்தைத் தட்டி விட்டுவிட வேண்டும். அதாவது மூன்றாம் தளத்தைக் காத்துக் கொண்டு ஆடுபவரை, அந்த இடத்தில் இருந்து ஓடிவரச் செய்வதுபோல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், தொட்டாடியவர்தம் தளத்திற்கு ஒட, அதில் இருந்தவர் 2ஆம் தளத்திற்கும், மற்றவர் மூன்றாம் தளத்திற்கும் எளிதாகப் போய்ச் சேர்ந்திட வாய்ப்பாக அமையும்.