பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி


ஒவ்வொரு மனித உயிரும் பிறந்தது முதல் இறக்கும் வரை உணவாலும், பருவ உணர்வாலும் ஆளப்படுகிறது. பால்உணர்வு' என்பதை (Sex) யாரும் தனியாகத் தேடிப் போய் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை.

இந் தப் பால உணர்வு ஆறு மாதக் குழந்தையிலிருந்தே தொடங்கிவிடுகிறது என்றும், இறக்கும் வரை அது எழுச்சி பெற்றே மனித உயிர்களை ஆசை காட்டுகிறது. ஆட்டுவிக்கிறது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, இயற்கையாகவே நமக்குள்ளே பிறந்து இலங்குகின்ற அந்த இனிய உணர்வினால் தான், உறவினால் தான் புதிய மனித இனமே படைக்கப்படுகின்றது என்பதை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இனிய உணர்வுதான் மனித இனத்திற்கு இதமளிக்கிறது. சுகம் கொடுக்கிறது. சொர்க்கத்தைக் காட்டுகிறது.

காதல் தான் மனித இனத்திற்கு முக்கியமான உணர்வு என்பது தானே உங்கள் கருத்து?

காதல் என்பது அன்பாகும். காதல் உணர்வு என்பது அடிப்படையான தேவையாகும். அதனை, வயிற்றுக்கு உணவு என்றும், தவிக்கும் வாய் தாகத்திற்குக் கிடைக்கும் தண்ணி என்றும் நாம் உதாரணம் காட்டலாம். இந்த உணர்வின் சிறப்பைப்பற்றிக் கூறும்போது, மனித இனம் அஸ்தமித்துப் போகாமல் பெருகி வாழ இயற்கை போடுகின்ற அஸ்திவாரம் என்று நீ உணரவேண்டும். இந்த அன்பின் மிகுதியே காதல் என்றும் நம்மால் பெரிதும் போற்றப்படுகிறது.