பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 థ్రి மென் பந்தாட்டம் ஒடும் முறையில் நளினம், பந்து வருவதைத் தடுப்பதில் லாவகம், எதிரியை ஏமாற்றுவதில் தந்திரம், பந்தைப் பிடிப்பதில் தன்னம்பிக்கை, பிடித்ததை எறிவதில் வல்லமை எல்லாமே சிறப்பாகச் செயல்படும் வண்ணம் தேர்ச்சியும் மாட்சியும் கொள்ள முடிகின்றது. ஆகவேதான், பயிற்சி செய்யுங்கள் - முயற்சி செய்யுங்கள்’ என்று ஆட்டக்காரர்களை ஆட்ட வல்லுநர்கள் சதாகாலமும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எனவே, ஆட்டக்காரர்கள் அனுதினம் கீழ்க்காணும் முறைகளில் கவனம் செலுத்தித் தேர்ந்திட வேண்டும் என்பதற்காக சில பயிற்சிகளைத் தந்திருக்கின்றோம். 1. சுவற்றில் ஒரு குறிப்பிட்ட அகலத்திற்குக் கோடு போட்டுக்கொண்டு, 20 அடிக்கு அப்பால் நின்ற வண்ணம், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் பந்து படுவதுபோல் எறிந்து பழகுதல். குறிப்பு: சுவற்றில் குறிப்பிடும் இடம், ஒருவரின் முழங்கால் - தோள் உயர அளவுக்கு இடைப்பட்ட உயரமாக இருக்க வேண்டும். 2. சுவற்றில் மோதி எதிர்ப்பட்டு வரும் பந்தை மற்றவர்கள் விழிப்புடன் இருந்து பிடித்துப் பழகுதல். 3. ஒருவர் பந்தை உயரே எறிய, இன்னொருவர் பத்திரமாகப் பிடிப்பதுபோல் பிடித்து பழகுதல், அந்தப் பந்தைப் பிடித்தவர் எறிய மற்றொருவர் பிடித்தல். இவ்வாறு உயரே சென்று வரும் பந்தைப் பிடிக்கப் பழகுதல்.