பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

37


முயல் இனம், காளை இனம், குதிரை இனம் என்று ஆணையும், மானினம், பெண் குதிரை இனம், யானை இனம் என்று பெண்ணையும் பிரித்தனர்.

இப்படி எதனால் பிரிக்க முடிந்தது? இதனால் என்ன லாபம் உண்டு?

திருமணம் என்பது, சுகமான வாழ்க்கையை, சுலபமாகப் பெறக்கூடிய சாதனம் என்பது உனக்கு நன்றாகத் தெரியும். அந்த உள் உணர்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது உடல் உறவுதான் என்பது உனக்கு நன்றாகப் புரியும்.

திருமணம் ஆகின்ற ஆண்பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் பூரணமாக அமைந்திருந்தால், மனப்பொருத்தமும் தானாகவே வந்துவிடும் என்பது உளநூல் வல்லுநர்களின் கருத்தாகும், அதனால்தான் பிரித்துக் கூறினார்கள்.

இவ்வாறு பிரித்துக் கொண்டால் எப்படி பொருத்தமாகக் கொள்ள முடியும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?

உடலை வைத்துத்தான் உள்ளம் என்பது உலக வழக்கு. நல்ல உடல் இருந்தால் நல்ல மனம் இருக்கும் என்பது போல. உடலால் ஒருவர் திருப்தியடைந்தால் தான், மனதாலும் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வயிற்றுப் பசியானது, உணவை உட்கொண்டதும் அடங்கிப் போய் விடுகிறது. அதைத் தொடர்ந்து ஒருவித நிம்மதியும் திருப்தியும் உண்டாவதை நாம் உணர்கிறோம். அதுபோலவே, உடலில் இயற்கையாக எழுந்து, உடல் முழுவதும் பரவி நிற்கின்ற உடல் உணர்வுப் பசியடங்கும். அப்பொழுதுதான் திருப்தி ஏற்படும். உலக வாழ்க்கையே