பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.எஸ். நவராஜ் செல்லையா

25


காதல் உறவு என்பது... காதல் என்பது மனநிலை. காதல் உறவென்பது உடல் செயல் நிலை. அது முற்றிலும் உடல் உறவுதொடர்புள்ளதாகும் . காதலை அளக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால், காதல் உறவை சோதனை செய்யலாம். புரிந்து கொள்ளலாம். குறைத்துக் கொள்ளலாம். குறித்தும் கொள்ளலாம்.

இந்த காதல் உறவு நமக்குத் தேவைதானா? நிச்சயமாக, திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவி என்று ஒன்றாகிவிடுவதால் மட்டும் முடிந்து போய்விடுவதல்ல. ஒருவரை ஒருவள் மனதால் ரசிப்பதுடன் மட்டும் நிறைவு பெற்றுப் போய்விடுவதல்ல! காதல் என்பது, கணவனும் மனைவியும் தமது அன்பின் ஆழத்தை வெளிப்படுத்திக்காட்டும் ஓர் அரிய அற்புதச் சுகநிலையாகும். அளவிட முடியாத ஆனந்த விளக்கமுமாகும்.

அன்பு இல்லாமல் காதல் இல்லை. காதல் இல்லாமல் காதல் உணர்வு இல்லை. காதல் உணர்வு இல்லாமல் உடல் உறவு இல்லை அந்த உறவு இல்லாமல் அன்பு இல்லை என்று வண்டி சக்கரம் போல் சுற்றிச் சுழன்று சுழன்று வருவதுதான் மணவாழ்க்கையாகும்.

ஆகவே, பால் உணர்வு என்பது மனித இனத்தைப் புதுப்பிக்கவும், மனித இனத்தைப் பிறப்பிக்கவும், மணமக்கள் தங்கள் ஆழ்ந்த அன்பினை ஆனந்த செயலாக வெளிப்படுத்திக் காட்டவும் கூடிய ஒரு விலைமதிக்க முடியாத சாதனமாகும்.

இந்த உடல் உறவு என்பது மனித வாழ்க்கையில் நூற்றூக்கு பத்து சதவிகிதம் தான். மீதியெல்லாம்