பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

85



முணுமுணுக்கும் கணவனும், தன்னிடமே பணம் இருக்க வேண்டும் என்று முயல்கிறபொழுது தான் சிக்கலே சிலிர்த்தெழுகின்றது.

பணம் வைத்து செலவு செய்பவருக்குத்தான் அதிக கெளரவம். அதிக பெருமை என்ற எண்ணத்திலேதான் இவ்வாறு தம்பதிகளுக்குள் சண்டை எழுகிறது.

ஒருசிலர், மனைவியிடம் கொடுக்கும் பணத்திற்கு பைசாவுக்குக்கூட கணக்கு வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து சண்டைபோடுவார்கள். இன்னும் சிலர், தேவையில்லாததையெல்லாம் ஏன் வாங்கித் தொலைக்கிறாய் என்று திட்டுவார்கள்.

கணவனிடம் சில வேண்டாத செலவு முறைகள் இருக்கும். அதை மனைவி குத்திக்காட்டி, ஏன் பணத்தைப் பாழாக்குகின்றீர்கள் என்று போராடுவாள்.

இவ்வாறு பணப் பிரச்சினை எழும்பொழுதெல்லாம், வீட்டிலே அமைதி நிலைக்காது. ஆனந்தம் தலை தூக்காது.

இந்தப் பிரச்சினையை அமைதியாக கணவனும் மனைவியும் தீர்த்துக்கொள்ள வேண்டும். மனைவிக்குப் பணம் எதற்கு என்று வாதாடுபவர்களும் உண்டு.

மனைவிக்கு பணம் தேவையில்லை யென்றாலும் அவளிடம் செலவுக் கென்று பணம் கொடுத்தால், கஞ்சத்தனமாக, கண்டதற்கெல்லாம் கணக்குக் கேட்காத பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

மனைவிக்கென்று தருகின்ற பணத்தை, அவள் மனம் போல் செலவு செய்ய அனுமதிப்பதானது, பல வழிகளில் நல்ல பயனையும் தரும்.