பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

மேலாக, அதிர்ஷ்டத்தின் ஆற்றலும் அந்த ஆட்டத்தில் இடம் பெறுவது...அதற்கு முதல் உதாரணமாகத் திகழ்வது சீட்டாட்டம். அடுத்து தாயம்-பகடை போன்றவைகளாகும்.

இதை அடிப்படையாக வைதது, மேல் நாட்டறிஞர் ஒருவர் கூறிச் சென்றார் இப்படி. "வாழ்க்கை என்பது சீட்டாட்டம் போன்றது. வந்த சீட்டுக்களை வைத்துக் கொண்டு, வெற்றி பெறுவது எப்படி என்று சிந்தித்து விளையாடுவது புத்திசாலித் தினம். வராத சீட்டுக்களுக்காக ஏங்கிக்கொண்டிருந்தால்.....அது தோல்வியை மட்டுமல்ல தொடர்ந்து அவமானத்தையும் அல்லவா, கொடுத்துக் கொண்டேயிருக்கும். அப்படித்தான் வாழ்க்கையிலும், நாம் வந்த நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டும். எதிர்பார்த்ததெல்லாம் நமக்குக் கிடைக்குமா என்ன!’’

உடலில் திறனும் வேண்டும். மூளையின்திறனும் வேண்டும். அடுத்து அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சீட்டாட்டம் இருக்கிறது.

சீட்டாட்டம் சிந்தனையை வளர்க்கும் சீரான ஆட்டம் என்கிறோம் நாம் ஆனால், சீட்டாட்டம் ஒரு சூதாட்டம். அது பயங்கர பாதாளத்தில் ஒரு வரைத் தள்ளிப் புதைத்துவிடும் புதைகுழி போன்ற ஆட்டம் என்று பரபரப்புடன் பேசுவோரும் உண்டு. அது உண்மைதான்.