பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121

குணம் அறிந்து சேர்க்கலாம். அப்படித் தான் உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது.

1. உடல் ஆற்றலை முதலாக வைத்து விளையாடும் விளையாட்டுக்கள். இது முதல் வகை. இதை உடல்திறன் வெளிப்பாடு (Physical outlet) என்பார்கள். களைப்படையும் வரை, காட்டாற்று வெள்ளம் போல அலைந்து திரிந்து ஆடி மகிழ்வது. கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், சடுகுடு கோகோ போன்ற ஆட்டங்களை நாம் உதாரணமாகக் காட்டலாம்.

2. மூளையைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுக்கள், உடலாற்றல் அதிகமாகத் தேவைப்படாமல், ஓரிடத்தில் இருந்து மூளையின் ஆற்றலை முதன்மைப்படுத்தி ஆடுகின்ற ஆட்டங்கள், இப்படி ஆடுவது வயதானவர்கள் தான் என்பதல்ல பொருள். இது அறிவார்ந்த ஆட்டமாக இருக்கும் தன்மையால், இப்படிப் பிரித்துக் காட்டியிருக்கின்றார்கள்.

சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், செக்கர்ஸ் போன்ற விளையாட்டுக்கள் இதற்கு சான்றாகும்.

3. அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்கள். வெறும் உடலாற்றல் மட்டும் போதாது. அறிவாற்றலுக்கும், நினைவாற்றலுக்கும்


பெண்-8