பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 Sဒါ့ငဲ့- மென் பந்தாட்டம் 5. தவறாக அடித்தாடிய பந்து (Foul Ball) விதிகளுக்குட்பட்ட முறையில் பிடிக்கப்பட்டால். 6. ஆடுகள உட்பகுதி (in Field) என்பது ஆடுகள சதுரத்தைக் குறிக்கும் எல்லைக்கோடுகளுக்குட்பட்ட பகுதியாகும். உட்புறப்பகுதியில் உயர்ந்து வரும் பந்து (in Field Fly) என்பது சரியான முறையில் மட்டையால் பந்து அடிக்கப்பட்டு (தொட்டாடியதால் அல்லது கோட்டோரமாக வருவதுபோல் உள்ள பந்து அல்ல) வருவதை பந்தைத் தடுத்தாடுபவர்களால் (Fielder) எளிதாகப் பிடிக்கும் வண்ணம் அமைவதை அல்லது அவர்களால் எளிதாகப் பிடிக்க முடியும் என்று நடுவர் கருதினால், அதுவே உட்புறப்பகுதியில் உயர்ந்து வரும் பந்து என்று அழைக்கப்படும். மேலே விளக்கப் பெற்றிருப்பது போல, பந்தடி ஆட்டக்காரர் பந்தை அடித்திருக்கும்போது, தள ஒட்டக்காரர்கள் முதல் இரண்டு தளங்களில் அல்லது முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என்ற மூன்று தளங்களிலும் இருந்தால், அப்பொழுது இரண்டு ஆட்டக்காரர்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்திருந்தால், பந்தடி ஆட்டக்காரர் ஆட்டமிழந்துவிடுகிறார். 8. ஒரு பந்தடி ஆட்டக்காரர் அடித்தாடிய பந்து உயரத்தில் இருக்கும் பொழுது அல்லது ஒருவர் பந்தை எறிய முயன்று அதை இன்னொரு தடுத்தாடும் ஆட்டக்காரர் பிடிக்க முயலும்பொழுது, அல்லது ஒருவர் எறிய முயன்று கொண்டிருக்கும் பொழுது, நடுவரின்