பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


வதில்தான். `பிறவி எடுத்த பெரும்பேறினை அடைந்தோம்' என்று கிரேக்கத்தினரே மயங்கி விழைந்தனர். இவ்வாறு, மண்ணும் நீரும், மரமும் கொடியும், கிளையும் மலரும் எல்லாமே புனிதமாக விளங்கிய ஒலிம்பியாவின் பகுதியிலே நடந்த நிகழ்ச்சிகளைத்தான் `ஒலிம்பிக் பந்தயங்கள்’ என்று இதனையும் புனிதமாக்கி, விளையாடி மகிழ்ந்தனர்.

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடந்த இந்தப் பந்தய நாட்களில், போரிடும் நாடுகள் எல்லாம் போரில் ஈடுபடாமல் போரினைக் கைவிட வேண்டும். அத்துடன், எதிரியாக இருந்தாலும் கூட, ஆயுத மில்லாமல்தான் அரங்கிற்குள் நுழையவேண்டும். மற்றவர்களுடன் மரியாதையாகப் பெருந்தன்மையுடன் பழக வேண்டும் என்ற விதிகளும் கட்டாய மாக்கப்பட்டு இருந்தன.

ஆகவேதான், புனிதமான இடத்தின் பெயரைத் தாங்கி ஒலிம்பிக் பந்தயம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட அதன் மகிமையும் பெருமையும் சற்றும்மாறாமல், புதிய பந்தயங்களுக்கும் `ஒலிம்பிக் பந்தயம், என்றே அழைத்து மகிழ்ந்து பங்கு பெறுகின்றார்கள் அவனியிலுள்ளோர்.