பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 81


தடைதாண்டி ஒட்டத்தில் பங்கு பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார். ஆக, விரைவோட்டம் தான் அவருக்கு இரண்டிலும் வெற்றி பெற வாய்ப்பளித்தது. அத்துடன் தடைதாண்டுதற்கான திறன்களும் துணை செய்தன என்பதை நாம் அறிய வேண்டும்.


400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம்


400 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்திற்குரிய தகுதி களையும் பயிற்சி முறைகளையும் விளக்கவும்?


400 மீட்டர் ஒட்டமே கடுமையானது என்கிற பொழுது, 400 மீட்டர் தடை தாண்டி ஒட்டம் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பதை விட, ஒடிப் பார்க்கும் பொழுது தான் உணர முடியும். அவ்வளவு கடுமையான ஒட்டத்தையும் இன்று விரைவோட்டம் போல் ஒடத் தொடங்கி விட்டனர். எல்லோரும் ஒடுகின் றார்கள். 3 அடி உயரமுள்ள 10 தடைசாதனங்களைத் தாண்டிக் கொண்டு ஒட்டததை ஒடி முடிக்க வேண்டும்.


ஒடத் தொடங்கும் கோட்டிலிருந்து முதல் தடை45 மீட்டர் தூரத்திலும், பிறகு ஒவ்வொரு தடைக்கும் இடையே 35 மீட்டர் இடைவெளியும் இருக்கும். கடைசித் தடைக்கும் முடிவெல்லைக்கும் இடையே 40 மீட்டர் தூரமும் இருக்கும்.


உலக சாதனையும் ஒலிம்பிக் சாதனையும் புரிந்த வெற்றி வீரர்களைப் பற்றி அறியும் போது, அவர்கள் ஒடுகின்ற முறை. ஆரம்பக் கோட்டில் இருந்து முதல் தடையைத் தாண்ட 24 காலடியும் (Stride Step) பிறகு அடுத்து வருகின்ற ஒவ்வொரு தடைக்கும் 15 காலடியும் வைத்து ஒடுகின்றனர். அவர்கள் எல்லோரும் 6 அடிக்கு