பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


இடை நிலை ஒட்டம் என்றால் தொடக்கத்தில் சாதாரணமாகவும், சில சமயத்தில் மிதமாகவும், மற்ற நேரங்களில் வேகமாகவும் ஒடி முடிவில் அபார வேகத் துடன் முடிப்பதுதான் என்று அந்த நாளில் விளக்கம் கூறினார்கள். ஆனால் இன்றுள்ள நிலை அப்படி அல் லவே!


அதிக கஷ்டத்தையும், அளவில்லாத உழைப்பையும் தாங்கிக் கொள்கின்ற கட்டுமஸ்தான உடல் எதையும் எளிதாக, இனிதாக ஏற்றுக் கொள்கின்ற தளர்ச்சியடை யாத மனப்பாங்கு பிறர் முன்னே ஒடிக் கொண்டிருப் பதைக் கண்டு ஆத்திரமடையாதவாறு அமைதியோடு எண்ணி, வெற்றி பெறுகின்ற வாய்ப்பை மென்மேலும் பெறமுயலும் தன்னம்பிக்கை எல்லாமே இதற்குரிய தகுதிகளாகும்.


1896ம் ஆண்டு நடந்த 1500 மீட்டர் ஒலிம்பிக் போட்டியின் சாதனை4 நிமிடம் 332 வினாடிகள். அதன் பிறகு எல்லாரும் 4 நிமிடத்திற்கு மேலே தான் ஒடிக் கொண்டிருந்தார்கள். “இனி வரலாற்றில் 4 நிமிடத்திற் குள்ளாக இவ்வோட்டத்தை ஒடி முடிக்க முடியாது. யாராலும் முடியவே முடியாது; மனிதத் தசைகளுக்கு அந்த அளவு சக்தியே கிடையாது” என்று பயிற்சி அறிஞர்களும், பார்வையாளர்களும் முடிவுசெய்துவிட்ட நேரம். அந்த எண்ணங்களைத்தவிடு பொடியாக்கினார். ராகர்பேனிஸ்டர் என்பவர்.அவர் ஒட எடுத்துக் கொண்ட நேரம் 1954ல் - 3 நிமிடம் 594 வினாடிகள், அதைக் கண்டு அகில உலகமே வியந்து பாராட்டியது. அதன் பிறகு 27 வயது மாணவரான ராபர்ட் ரயன் என்பவர் 3 நி. 51.3 வினாடிகளில் கடந்திருக்கிறார். அந்த துரத்தை எண்ணும் போது, அவர் ஆற்றலின் மகிமை என்னே!