பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 135


ஒருங்கிணைந்தவாறு இருக்க வேண்டும். கோலுரன்றும் பெட்டிக்கு அருகில் வரும் வரை, அதாவது கடைசி மூன்று அல்லது நான்கு அல்லது 5 காலடிகளில் எந்தவிதத் தயக்கமோ தடுமாற்றமோ இல்லாதவாறு ஓடி வந்து


அதற்கான பெட்டியில் கோலை ஊன்ற வேண்டும்.


2. கோலைப் பெட்டியில் ஊன்றி எழுதல்: கோலை வந்த இடத்தில் வந்ததும் பெட்டியில் ஊன்றி எழ வேண் டும் என்ற சந்தேகம் எழலாம். அதற்கு இந்த முறையைப் பின் பற்ற வேண்டும். ஊன்றும் பெட்டியில் தாண்டும் கோலை நிற்க வைத்து, அதன் அருகில் தாண்டுவோர் நின்று, கை எட்டுகிற வரைக்கும் கோலினைப் பிடித்து, அதிலிருந்து ஒரு இணைக்கோட்டை அதாவது கோலின் யர பாகத்தை, ஊன்றும் பெட்டியிலிருந்து தொடங்கி, அங்கு குறியிட(Mark) வேண்டும். அந்த இடமே, வேகமாக ஒடி வந்து குத்தும் பெட்டியில் கோலை ஊன்றத் தொடங்கும் இடமாக அமையும். அந்தக் குறிப்பிடத்தி விருந்தே, ஒடிவரத் தொடங்கும் எல்லையின் துரத்தையும், பிறகு கடைசி நான்கு, ஐந்து அடி என்பதையும் நிர்ண யித்துக் கொள்ள வேண்டும்.


கடைசி இரண்டு மூன்று தப்படி இருக்கும் போதே தலைப்பாகம் உயர்ந்து இருக்கின்ற கோலை, முன்புறம் தாழ்த்திவேகமாக ஊன்றும் பெட்டியில் ஊன்றவும். கீழே இறங்கி இருக்கும் இடது கை, கோலை அங்குமிங்கும் அசையாதவாறு பிடித்திருக்க, மடித்திருந்த வலது கை இப்பொழுது முன்புறமாகவும், உயரமாகவும் நிமிர்ந்து உடலருகே இருக்கும் பொழுது, கீழேயுள்ள இடது கை உயர்ந்து வலது கையருகே வந்து சேர்ந்து கொள்ளும்.