பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா [] 111


g


இவ்வாறு மும்முறைத் தாண்டும் சக்தியை, வலு வுள்ள கால்களாலும், வளமான பயிற்சிகளாலும்தான் தாமாகச் செய்யமுடியும்.


1896ம் ஆண்டு நடந்த முதல் ஒலிம்பிக் போட்டியின் சாதனை 44, 11% ”, 1968ம் ஆண்டின் சாதனை. 57% ” ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இதன் சாதனை பேரளவில் பெருகிச் செல்கின்றது. கடந்த எட்டு ஆண்டு களில் இந்நிகழ்ச்சியின் முன்னேற்றம் ஈடு இணையற்றது. 1964 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சாதனை 55'3%”. ஆனால் 18ம் ஆண்டின் முதலாவது வந்த ஆறு வீரர்களுமே. இந்த சாதனையை மீறி இருக்கிறார்கள் என்றால், இந்த நிகழ்ச்சியில் இன்னும் முடியும் என்று நம்பிக்கை இருக் கிறது ஏனென்றால் மும்முறைத் தாண்டுவதை முறையோடு பழகினால், வெற்றி பெறலாம் நிச்சயமாக


தாவல், காலடி வைத்தல், தாண்டல் என்ற மும் முறைத் தாண்டலை, ஒருசேர, ஒன்றுபோலத் தாண்டி னால் அதிக தூரம் தாண்ட முடியும். கீழே பட்டியல்படி, குறித்து வைத்தக் கொண்டுப் பழகி பாருங்கள்.


தாவல் காலடி வைத்தல் தாண்டல் மொத்த தூரம் 13 அடி 10 அடி 13 அடி 36 அடி 15 அடி 10 அடி 15 அடி 40 அடி 17 அடி 12 அடி 16 அடி 45 அடி 20 அடி 13 அடி 18 அடி 51 அடி


இந்த விகிதத்தில் தாண்டும் இடத்தில் அளந்து அடையாளம் வைத்துக்கொண்டு ஒவ்வொரு திறனையும் (Skill) கைவரப் பெறும் வரையில் கடினமாகப் பயிற்சி செய்க. ஒன்று முடிந்ததும் அடுத்தத் திறனை நன்றாகப் பழகிக் கொள்ளும் வரை பயிற்சி பெறுக.