பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 139


கைகால்கள் முறிந்துவிடும் என்பதை மறக்கவே கூடாது. ஆகவே, நிதானமாகவே மணற் பகுதியில் கால்களை களன்றிக் குதிக்க வேண்டும்.


இதற்கான பயிற்சி முறைகள் யாவை?


தாண்ட உதவும் கோலினை சரியாகப் பிடிக்கும் முறையை, முறையாகக் கற்றுக்கொண்டு.பலமுறை பயிற்சி செய்ய வேண்டும்.


எளிதாக ஏந்திக் கொண்டு ஓடி வருதல்; ஒடத் தொடங்கும் எல்லையைத் குறித்துக் கொண்டு, நீளத் தாண்டலுக்கு ஒடி வரும் முறை போல, பல முறை ஒடி வந்து, தாவத்தொடங்கும் அடையாள இடத்தில் நிற்றல்.


பிறகு அங்கிருந்து பலமுறை ஊன்றும் பெட்டியில் கோலை ஊன்றி மேலே எழும் முறையைக் கற்றல். மேலே கூறிய அத்தனைத் திறன், நுணுக்கங்களையும், குறையில் லாமல் கற்றுக்கொள்ளுதல் வேண்டும்.


குறைந்த தூரத்திற்குள்ளே விரைவாக ஒடி வர வேண்டியிருப்பதால், விரைவோட்டக்காரர்களுக்கான பயிற்சிகளைச் செய்க.


தடை தாண்டி ஒடும் முறையில் ஒடினால் தான், காலடி சீராக வரும் என்பதால், தடைதாண்டி ஒடும் பயிற்சிகளைச் செய்க.


கைத்தசைகளின் வலிமையால் தான் உடலைத் தாங்கித் தாண்ட வேண்டும் என்பதால், இருதலைத் தசைகள், முத்தலை தசைகளுக்கான எடைப் பயிற்சிகளை செய்க, கயிறு ஏறுதல், கம்பியில் பயிற்சி செய்தல், நல்ல வலுவினைத் தரும்.